பாதாமி - வரலாறு
இருப்பிடம் பாதாமி வட கர்நாடகத்தில் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ளது. பெயர்க் காரணம் வரலாற்றில் பாதாமியின் பெயர் வாதாபி என்பதாகும். அகத்தியரால் உண்டு செரிக்கப்பட்டு இறந்த அசுரன் வாதாபியோடு இவ்வூரின் பெயரைத் தொடர்பு படுத்தும் கதைகள் உண்டு. அங்கு உள்ள அகத்திய தீர்த்தம் என்னும் ஏரி இக்கதைக்கு வலிமை சேர்க்கிறது. வரலாறு சாளுக்கியர் தலைநகரம் வரலாற்றில் சாளுக்கியர்களின் தலைநகரமாக 6 ஆம் நூற்றாண்டில் பாதாமி அறிமுகமாகிறது. மூன்று பக்கங்களில் குதிரை லாட வடிவத்தில் சூழ்ந்து நிற்கும் மலைகள் இயற்கை அரண்களாய் அமைந்துள்ளது இதன் சிறப்பு. கூடுதலாய் பல்வேறு காலங்களில் மலைகள் மீது கோட்டைச் சுவர்களும் கட்டப்பட்டு கூடுதல் பலம் பெற்றுள்ளது. சாளுக்கிய அரசின் மையம் கிருஷ்ணையின் துணை நதியான மலபிரபா நதி இரு மலைத்தொடர்களுக்கு இடையே பாயும் சமவெளியில் அமைந்துள்ளது. அதன் முக்கிய இடங்களான பட்டடக்கல், ஐஹொளே நதிக்கரையிலேயே அமைந்திருக்க பாதாமி சற்று தொலைவில் உள்ளது. சாளுக்கியர் ஆட்சி (பொ ஆ 543 - 757) சாளுக்கிய வம்சத்தின் தனி ஆட...