Posts

Showing posts from 2020

கிழக்கு பூதநாதர் (தட்டுகோடி) கோயில்கள்

Image
பாதாமி அருங்காட்சியகத்திலிருந்து கிழக்கு நோக்கிச் சென்றால் அகத்திய தீர்த்தத்தின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது வடக்கு பூதநாதர் கோயில் கூட்டம். இவை தட்டுக்கோடி கோயில்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.  வடக்கு பூதநாதர் (தட்டுகோடி) கோயில்கள்  https://commons.wikimedia.org/wiki/File:Group_of_temples_on_the_north_side_of_the_Lake_towards_east_end.JPG Naane.naanu / CC BY-SA (https://creativecommons.org/licenses/by-sa/3.0) இந்த கோயில்கள் கல்யாணி சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. இவை சில பொதுவான கோயில் கலை வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளன. கடம்ப (பம்சன) பாணி விமானம்  சரிந்த கூரைகளுடைய மண்டபங்கள்  கடைவுத் தூண்கள்  திறந்த வெளி மண்டபங்களைச் சுற்றிய கக்ஷசனம் என்னும் திண்ணை அமைப்பு. மண்டபக்கூரைகளில் தாமரைச் சிற்பங்கள். அரைத் தூண்கள், தெய்வ கோட்டங்கள் அற்ற எளிய வெளிச் சுவர்கள். வடக்கு பூதநாதர் கூட்டத்தின் முதன்மைக் கோயில். இங்குள்ள கோயில்களுள் முதன்மையான கோயில் முன் மண்டபம், உள் மண்டபம், இடை நாழி, கருவறை கொண்டுள்ளது.  முன் மண்டபம் உள் மண்டப வாயில் மேலே வேழச்செல்வி (க...

பூதநாதர் கோயில்

Image
அகத்தியர் தீர்த்தத்தின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது பூதநாதர் கோயிலும் அதைச் சுற்றியுள்ள சிறு கோயில்களும்.  பூதநாதர் கோயிலும் அதைச் சுற்றியுள்ள சிறு கோயில்களும் உயர்ந்த விமானத்துடன் நடுநாயகமாகக் காணப்படுவது பூதநாதர் கோயில். பூதநாதர் என்னும் பெயர் பூதகணங்களின் தலைவன் என்று பொருள்பட்டு சிவனைக் குறிக்கும். இது 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. சாளுக்கியர்கள் பாதாமியில் கட்டிய கோயில்களில் இறுதியானதாக இருக்கலாம். இதைச் சுற்றியுள்ள கோயில்கள் ராஷ்டிரகூடர் காலத்தவை. பூதநாதர் கோயிலும் அதைச் சுற்றியுள்ள சிறு கோயில்களும் பூதநாதர் கோயில் மூன்று தள திராவிட வகை விமானம், இடைநாழி, மண்டபம், முன்மண்டபம் ஆக்கியவற்றைக் கொண்ட மேற்கு நோக்கிய கோயில். பூதநாதர் கோயிலின் மூன்று தள திராவிட வகை  விமானம் அ. பாதபந்த வகை அடித்தளம்: 1. உபானம். 2. ஜகதி. 3. குமுதம். 4. கண்டம். 6. பட்டிகை. ஆ.  சுவர் (பித்தி) 7. சுவர். 8, அரைத்தூண் 9. தேவகோட்டம். இ.  கூரை (பிரஸ்தரம்) : 10. கபோதம். 11. கர்ண கூடம். 12. சாலைக் கூடம். 13. பஞ்சரம். (11,12,13 ஆகியவற்றைக் கொண்ட சுற்றுச் சுவர...

பாதாமி ஜம்புகேசுவரர் கோயில் - முதல் முக்கூடக் கோயில்

Image
பாதாமி விருபாக்ஷர் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது ஜம்புலிங்கேசுவரர் கோயில். மதிலோ, வேலியோ இல்லாமல் வீடுகளுக்கிடையே பரிதாபமாக நின்றுகொண்டிருக்கிறது. அருகிலிருக்கும் வீட்டுக்காரர்கள் கோயிலின் முன் மண்டபத்தில்  துணி உலர்த்தியிருந்ததைக் கண்டேன். கோயில் திறந்திருந்தது. ஆனால் யாரும் இல்லை. ஜம்புகேசுவரர் கோயில் முன் மண்டபம் கிழக்கு நோக்கிய இக்கோயில் சாளுக்கிய மன்னன் விநயாதித்தனின் அன்னை விநயவதியால் பொ.ஆ, 699 இல் கட்டப்பட்டது.. முன்மண்டபம், மகாமண்டபம், மூன்று கருவறைகள் கொண்டது. மூன்று கருவறைகளைக் கொண்ட கோயில் முக்கூடக்  (திரிகூட) கோயில் என்று அழைக்கப்படுகிறது.  கர்நாடகத்தில் இதுவே முதல் திரிகூடக் கோயில் ஆகும்.  முன்மண்டபம் 16 தூண்களைக் கொண்டது. அதன் மற்றும் உள்ளிருக்கும் மகா மண்டபத்தின் தூண்கள் சதுரமாக உள்ளன. எளிய பட்டைகளும், அவற்றின் மீது அரைவட்டங்களும் வெட்டப் பட்டிருந்தாலும், அவற்றில்  சிற்பங்கள், வேலைப்பாடுகள் செதுக்கப் படவில்லை. வெளி வரிசைத் தூண்களுக்கிடையில் அமர திண்ணைகள் உள்ளன. முன்மண்டபக் கூரை நடுவில் உயர்ந்து சிற்பங்களால்செறிந்துள்ளது. ...