Posts

Showing posts from 2022

பெங்களூரு தொம்மலூரு சொக்கநாதர் கோயில்

Image
பயணம் பயண நாள்: 02/06/2022 (சுபகிருதுஆண்டு வைகாசி மாதம் 19 ஆம் நாள்). 'சொக்கநாதர்' என்றப் பெயரைக் கொண்டு ஒரு சிவன் கோயிலை எதிர்பார்த்துச் சென்ற என்னை எதிர்கொண்டது ஒரு திருமால் கோயில். இடம்:  ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சொக்கநாதசுவாமி கோயில் பெங்களூரில் தொம்மலூரில் (Domlur)உள்ளது. ஊர்ப் பெயர் தொம்மலூரில் கல்வெட்டுகளில் ' இலைப்பாக்க நாட்டு தொம்பலூர் ஆன தேசிமாணிக்கபட்டினம்'   என்று குறிப்பிடப்பட்டுளது. அது அமைந்த பகுதி  ' 'இராஜராஜ சோழ வளநாடு' (பொ.ஆ. ?1200) அல்லது   'ராஜேந்திர சோழ வளநாடு '  (பொ.ஆ. ? 1266 )  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவன் பெயர் கல்வெட்டுகளில் இறைவன் பெயர் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'திரிபுராந்தகப் பெருமாள்' என்றும் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 'சொக்கப் பெருமாள்' என்றும் காணப்படுகிறது. பிந்தைய பெயர் 'சொக்கநாதர்' ஆகி நிலைத்துவிட்டது.  காலம் கோயிலின் விமானமும் அர்த்த மண்டபமும் 10 நூற்றாண்டில் சோழர் ஆகட்டப்பட்டது, மகா மண்டபம் விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்டது என கட்டடக்கலை அடிப்படையில் கருதப்படுகிறது. கோயி...

சோமேசுவரர் கோயில், ஹலசூரு, பெங்களூரு - பகுதி 4: கிரிஜா கல்யாணம்

Image
ஹளசூரு சோமேசுவர் கோயிலில் சோமேசுவர் சன்னிதிக்கு வடபக்கம் காமாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. அதன் வெளிச்சுவரின் மூன்று பக்கங்களிலும் சிவன்-பார்வதி திருமணக் கதை நீண்ட தொடர்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. கிரிஜா கல்யாணம் சிவன் பார்வதி திருமணக் கதை 'கிரிஜா கல்யாணம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கதை 'சிவமகாபுராணம்' முதலிய புராணங்களிலும், காளிதாசரின் 'குமார சம்பவம்' என்ற காப்பியத்திலும் விவரிக்கப் பட்டிருக்கிறது. கதை சக்தி இமைய மலையரசனின் தவத்திற்கு மகிழ்ந்து அளித்த வரத்தின்படி அவருக்கு மகளாகப் பிறந்தார். பார்வதி என்று பெயர் கொண்டார். கிரிராஜனின் மகள் ஆனதால் கிரிஜா.  பார்வதி சிவனையே தன் கணவனாக வரித்து, அவரை அடையக் கடும் தவம் செய்தார். ஆனால் சிவனோ தனிமையில் யோகத்தில் மூழ்கி இருந்தார். தாரகாசுரனால் அடிமைகளாக்கப்பட்ட தேவர்களும் சிவ பார்வதி திருமணத்தை விரும்பினர். ஓப்புமை இல்லா வலிமை பெற்ற தாரகனின் மரணம் சிவ மைந்தனால் மட்டுமே நிகழும் என்பது பிரம்மன் தந்த வரம்.  இந்திரன் சொன்னபடி மன்மதன் ரதியோடு சென்று சிவனைச் சுற்றி வசந்த காலத்தை உருவாக்கினான். தன் மலர்க் கணைகளை அவர் மீது...

சோமேசுவரர் கோயில், ஹலசூரு, பெங்களூரு - பகுதி 3: உள் திருச்சுற்று

Image
வெளிச்சுவர் உள் திருச்சுற்று மூடிய ஒன்று. அதன் வெளிச்சுவரின் வெளிப்பக்கம் தூண்கள், கோட்டங்கள், கும்ப பஞ்சரங்கள், சிற்பங்களால் அணி செய்யப்பட்டுள்ளது. தெற்குச் சுவரின் கிழக்குப் பக்கம் தெற்குச் சுவரின் மேற்குப் பக்கம் நவநாதர்கள் மச்சேந்திரநாதர் முதலான நவநாதர்கள் என்னும் ஒன்பது சித்தர்களின் சிற்பங்கள் வரிசையாக மேற்குச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. இது இந்த கோயிலின் சிறப்புகளுள் ஒன்று. கோரக்கநாதர் (புலி மீது) - விநாயகரின் வலது புறம் மேலே இந்த கோட்டத்தில் மட்டுமே தெய்வச் சிலை உள்ளது. சௌரங்கிநாதர் (மான்மீது); வராக நாதர் (பன்றி மீது) மச்சேந்திரநாதர் (மீன் மீது), பைரவநாதர் (தேள் மீது), நாகநாதர் (பாம்பு மீது வியாழிநாதர் (வியாழம் மீது, மான் கொம்பு ஊதுகுழலை வலது கையில் பிடித்து); சிங்கம் மீது அமர்ந்த ஒரு நாத சித்தர் கூர்மநாதர் (ஆமை மீது) லலிதாசனத்தில் வெளிச்சுவரின் மற்ற சிற்பங்கள் இசைக் கலைஞர்கள் விநாயகரைத் தவிர சிற்பம் உள்ள மற்றொரு கோட்டம் மனித உருவங்களுடன் கும்பபஞ்சரம் புருஷாமிருகம் கின்னரர் உள் திருச்சுற்று உள் திருச்சுற்றில் உள்ளவை  மாண்டவ்ய முனிவர் சிலை -  இத்தல இறைவன் மாண்டவ்ய முனிவ...