Posts

Showing posts from June, 2020

பாதாமி தொல்பொருள் அருங்காட்சியகம்

Image
அமைவிடம்  லாட வடிவில் வடக்கு, தெற்கு, கிழக்கு திசைகளில் அமைந்திருக்கும் குன்றுத் தொடர், அவற்றின் மீதுள்ள கோட்டைச் சுவர்கள். இடையில் அமைந்துள்ள ஒரு ஏரி. அகத்தியர் ஏரி என்று பெயர். வாதாபி என்ற அசுரனை அகத்தியர் இங்கு அழித்த தொன்மத்தின் நினைவாக வந்த பெயர். அதன் வடமேற்கே உள்ள கோட்டை வாசலைச் சாலையிலிருந்து குறுகிய தெருக்கள் மூலமாக அடையலாம். கோட்டை வாயில்  பூத கணங்கள், கோட்டை வாயில் உள்ளே உள்ள சிற்பம் ஒன்று. கோட்டை வாயிலில் இருந்து உள்ளே சிறிது தூரம் சென்றதும் வலது பக்கத்தில் உள்ளது அருங்காட்சியகம்.  பாதாமி அருங்காட்சியகம் https://www.deccanherald.com/spectrum/spectrum-top-stories/past-preserved-735815.html இந்த அருங்காட்சியகம் 1979 இல் ஆங்காங்கு கண்டெடுக்கப்பட்ட  சிற்பங்களை பாதுகாத்து வைக்குமிடமாக இருந்தது. 1982 இல்  அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இங்கு பாதாமி, பட்டடக்கல், நாகநாதகொள்ள ஆகிய இடங்களில் கிடைத்த கோயில் பகுதிகள், சிற்பங்கள் உள்ளன. இவை சாளுக்கியர், ராஷ்டிரகூடர், கல்யாணி சாளுக்கியர், விஜயநகர காலங்களைச் சேர்ந்தவை....