Posts

Showing posts from 2026

பேகூரு பஞ்சலிங்கேசுவரர் கோயில்

Image
பயணம் 03/06/2022; ஆண்டு வைகாசி மாதம் ஆம் நாள் இடம் பேகூரு பெங்களூரு மாநகராட்சியின் தெற்கு எல்லையில் கரைந்து விட்ட ஒரு ஊர்.  இதுவே பெங்களூரு பகுதியின் மிகப் பழமையான இடம். பொ.ஆ. 517 ஆண்டு மேலை கங்கர்களின் மலஹொள்ளி செப்புப் பட்டயத்தில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. பழம் கன்னட எழுத்து. இதில் 'பேம்புரீஷ்வர' என்னும் வார்த்தை வருகிறது. 'பேம்புர்' என்பது 'வேப்பூர்' - பேகூரின் ஒரு பழம் பெயர்.  படம் நன்றி: Twitter: Inscription Stones Of Bangalore  @inscriptionblr பேகூரு நடுகல் கல்வெட்டு ஒன்றில்தான் முதன் முதலாக 'பெங்களூரு' என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த நடுகல் பேகூரு பஞ்சலிங்கேசுவரர் கோயில் வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காலம் சுமார் பொ.ஆ. 890 ஆண்டு. நாகத்தரன் என்ற கங்கர் படைத்தலைவன் மகன் புட்டனபதி, நாகத்தரன் வீட்டு மகன் பெர்வோணச் செட்டி ஆகியோர் நுளம்பர்களுடனான 'பெங்களூரு" போரில் இறந்த செய்தியை இந்த கல்வெட்டு பதிவு செய்கிறது. 'பெங்களூரு' கல்வெட்டு 'பெங்களூரு' கல்வெட்டு - விளக்கப் பலகை பெங்களூரு மடிவாலா சோமேசுவரர் கோயிலில் பொ.ஆ...