Posts

பேகூரு பஞ்சலிங்கேசுவரர் கோயில்

Image
பயணம் 03/06/2022; ஆண்டு வைகாசி மாதம் ஆம் நாள் இடம் பேகூரு பெங்களூரு மாநகராட்சியின் தெற்கு எல்லையில் கரைந்து விட்ட ஒரு ஊர்.  இதுவே பெங்களூரு பகுதியின் மிகப் பழமையான இடம். பொ.ஆ. 517 ஆண்டு மேலை கங்கர்களின் மலஹொள்ளி செப்புப் பட்டயத்தில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. பழம் கன்னட எழுத்து. இதில் 'பேம்புரீஷ்வர' என்னும் வார்த்தை வருகிறது. 'பேம்புர்' என்பது 'வேப்பூர்' - பேகூரின் ஒரு பழம் பெயர்.  படம் நன்றி: Twitter: Inscription Stones Of Bangalore  @inscriptionblr பேகூரு நடுகல் கல்வெட்டு ஒன்றில்தான் முதன் முதலாக 'பெங்களூரு' என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த நடுகல் பேகூரு பஞ்சலிங்கேசுவரர் கோயில் வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காலம் சுமார் பொ.ஆ. 890 ஆண்டு. நாகத்தரன் என்ற கங்கர் படைத்தலைவன் மகன் புட்டனபதி, நாகத்தரன் வீட்டு மகன் பெர்வோணச் செட்டி ஆகியோர் நுளம்பர்களுடனான 'பெங்களூரு" போரில் இறந்த செய்தியை இந்த கல்வெட்டு பதிவு செய்கிறது. 'பெங்களூரு' கல்வெட்டு 'பெங்களூரு' கல்வெட்டு - விளக்கப் பலகை பெங்களூரு மடிவாலா சோமேசுவரர் கோயிலில் பொ.ஆ...

பெங்களூரு தொம்மலூரு சொக்கநாதர் கோயில்

Image
பயணம் பயண நாள்: 02/06/2022 (சுபகிருதுஆண்டு வைகாசி மாதம் 19 ஆம் நாள்). 'சொக்கநாதர்' என்றப் பெயரைக் கொண்டு ஒரு சிவன் கோயிலை எதிர்பார்த்துச் சென்ற என்னை எதிர்கொண்டது ஒரு திருமால் கோயில். இடம்:  ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சொக்கநாதசுவாமி கோயில் பெங்களூரில் தொம்மலூரில் (Domlur)உள்ளது. ஊர்ப் பெயர் தொம்மலூரில் கல்வெட்டுகளில் ' இலைப்பாக்க நாட்டு தொம்பலூர் ஆன தேசிமாணிக்கபட்டினம்'   என்று குறிப்பிடப்பட்டுளது. அது அமைந்த பகுதி  ' 'இராஜராஜ சோழ வளநாடு' (பொ.ஆ. ?1200) அல்லது   'ராஜேந்திர சோழ வளநாடு '  (பொ.ஆ. ? 1266 )  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவன் பெயர் கல்வெட்டுகளில் இறைவன் பெயர் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'திரிபுராந்தகப் பெருமாள்' என்றும் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 'சொக்கப் பெருமாள்' என்றும் காணப்படுகிறது. பிந்தைய பெயர் 'சொக்கநாதர்' ஆகி நிலைத்துவிட்டது.  காலம் கோயிலின் விமானமும் அர்த்த மண்டபமும் 10 நூற்றாண்டில் சோழர் ஆகட்டப்பட்டது, மகா மண்டபம் விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்டது என கட்டடக்கலை அடிப்படையில் கருதப்படுகிறது. கோயி...