கிழக்கு பூதநாதர் (தட்டுகோடி) கோயில்கள்
பாதாமி அருங்காட்சியகத்திலிருந்து கிழக்கு நோக்கிச் சென்றால் அகத்திய தீர்த்தத்தின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது வடக்கு பூதநாதர் கோயில் கூட்டம். இவை தட்டுக்கோடி கோயில்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. வடக்கு பூதநாதர் (தட்டுகோடி) கோயில்கள் https://commons.wikimedia.org/wiki/File:Group_of_temples_on_the_north_side_of_the_Lake_towards_east_end.JPG Naane.naanu / CC BY-SA (https://creativecommons.org/licenses/by-sa/3.0) இந்த கோயில்கள் கல்யாணி சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. இவை சில பொதுவான கோயில் கலை வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளன. கடம்ப (பம்சன) பாணி விமானம் சரிந்த கூரைகளுடைய மண்டபங்கள் கடைவுத் தூண்கள் திறந்த வெளி மண்டபங்களைச் சுற்றிய கக்ஷசனம் என்னும் திண்ணை அமைப்பு. மண்டபக்கூரைகளில் தாமரைச் சிற்பங்கள். அரைத் தூண்கள், தெய்வ கோட்டங்கள் அற்ற எளிய வெளிச் சுவர்கள். வடக்கு பூதநாதர் கூட்டத்தின் முதன்மைக் கோயில். இங்குள்ள கோயில்களுள் முதன்மையான கோயில் முன் மண்டபம், உள் மண்டபம், இடை நாழி, கருவறை கொண்டுள்ளது. முன் மண்டபம் உள் மண்டப வாயில் மேலே வேழச்செல்வி (க...