பெங்களூரு தொம்மலூரு சொக்கநாதர் கோயில்
பயணம் பயண நாள்: 02/06/2022 (சுபகிருதுஆண்டு வைகாசி மாதம் 19 ஆம் நாள்). 'சொக்கநாதர்' என்றப் பெயரைக் கொண்டு ஒரு சிவன் கோயிலை எதிர்பார்த்துச் சென்ற என்னை எதிர்கொண்டது ஒரு திருமால் கோயில். இடம்: ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சொக்கநாதசுவாமி கோயில் பெங்களூரில் தொம்மலூரில் (Domlur)உள்ளது. ஊர்ப் பெயர் தொம்மலூரில் கல்வெட்டுகளில் ' இலைப்பாக்க நாட்டு தொம்பலூர் ஆன தேசிமாணிக்கபட்டினம்' என்று குறிப்பிடப்பட்டுளது. அது அமைந்த பகுதி ' 'இராஜராஜ சோழ வளநாடு' (பொ.ஆ. ?1200) அல்லது 'ராஜேந்திர சோழ வளநாடு ' (பொ.ஆ. ? 1266 ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவன் பெயர் கல்வெட்டுகளில் இறைவன் பெயர் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'திரிபுராந்தகப் பெருமாள்' என்றும் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 'சொக்கப் பெருமாள்' என்றும் காணப்படுகிறது. பிந்தைய பெயர் 'சொக்கநாதர்' ஆகி நிலைத்துவிட்டது. காலம் கோயிலின் விமானமும் அர்த்த மண்டபமும் 10 நூற்றாண்டில் சோழர் ஆகட்டப்பட்டது, மகா மண்டபம் விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்டது என கட்டடக்கலை அடிப்படையில் கருதப்படுகிறது. கோயி...