பாதாமி தொல்பொருள் அருங்காட்சியகம்
அமைவிடம்
லாட வடிவில் வடக்கு, தெற்கு, கிழக்கு திசைகளில் அமைந்திருக்கும் குன்றுத் தொடர், அவற்றின் மீதுள்ள கோட்டைச் சுவர்கள். இடையில் அமைந்துள்ள ஒரு ஏரி. அகத்தியர் ஏரி என்று பெயர். வாதாபி என்ற அசுரனை அகத்தியர் இங்கு அழித்த தொன்மத்தின் நினைவாக வந்த பெயர். அதன் வடமேற்கே உள்ள கோட்டை வாசலைச் சாலையிலிருந்து குறுகிய தெருக்கள் மூலமாக அடையலாம்.
![]() |
| கோட்டை வாயில் |
![]() |
| பூத கணங்கள், கோட்டை வாயில் உள்ளே உள்ள சிற்பம் ஒன்று. |
கோட்டை வாயிலில் இருந்து உள்ளே சிறிது தூரம் சென்றதும் வலது பக்கத்தில் உள்ளது அருங்காட்சியகம்.
![]() |
| பாதாமி அருங்காட்சியகம் https://www.deccanherald.com/spectrum/spectrum-top-stories/past-preserved-735815.html |
இந்த அருங்காட்சியகம் 1979 இல் ஆங்காங்கு கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களை பாதுகாத்து வைக்குமிடமாக இருந்தது. 1982 இல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இங்கு பாதாமி, பட்டடக்கல், நாகநாதகொள்ள ஆகிய இடங்களில் கிடைத்த கோயில் பகுதிகள், சிற்பங்கள் உள்ளன. இவை சாளுக்கியர், ராஷ்டிரகூடர், கல்யாணி சாளுக்கியர், விஜயநகர காலங்களைச் சேர்ந்தவை.
சாளுக்கியர் கால கோயில்கள் உள்ள இடங்கள்: பாதாமி, பட்டடக்கல், ஐஹொளே, மஹாகூடம், ஆலம்பூர் (தெலுங்கானா). புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் 3 சிற்பங்களும், கிட்டூர் அருங்காட்சியகத்தில் சில சிற்பங்களும் உள்ளன.
இங்கு நான்கு காட்சிக் கூடங்கள் உள்ளன. அவற்றைத் தவிர தாழ்வாரத்திலும் வெளியிலும் சிற்பங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
இங்குள்ள சிற்பங்களில் முக்கியமானவை நான்கு:
- மகர தோரணம் - நுழைவு அறையில் (காட்சிக்கூடம் 1) உள்ளது.
- லஜ்ஜா கௌரி - அதன் பின் அறையில் (காட்சிக்கூடம் 2) உள்ளது.
- திரிபுராந்தகர் - காட்சிக்கூடம் 1
- கால சம்ஹார மூர்த்தி - காட்சிக்கூடம் 1
மகர தோரணம்
![]() |
| From: Archeological Museum, Badami Brochure (2019) by ASI, Badami. |
நுழைவு வாயிலை அடுத்து உள்ள கூடத்தில் நடுநாயகமாக விளங்கும் பெரிய சிற்பம். இரு புறமும் செதுக்கப்பட்டது. கோயில் அல்லது குளத்திற்கு முன்பாக இரு தூண்களின் மேல் அமைந்து தோரண வாயிலாக இருந்திருக்க வேண்டும்.
காலம்: கல்யாணி சாளுக்கியர் (11-12 ஆம் நூற்றாண்டு)
லஜ்ஜா கௌரி
![]() |
| லஜ்ஜா கௌரி - பாதாமி அருங்காட்சியகம் Vedaradha / CC BY-SA (https://creativecommons.org/licenses/by-sa/4.0) |
முன் கூடத்தின் பின்னால் உள்ள அறையின் முதன்மை சிற்பம். இது பாதாமியில் இருந்து 8 கிமீ தொலைவிலுள்ள நாகநாதன கொள்ள என்ற இடத்தில் கிடைத்தது. தாய் தெய்வ வழிபாட்டின் படிமமாகிய இந்த தலைக்கு பதில் தாமரை கொண்ட தெய்வத்தின் சிற்பங்களைப் பற்றி அறிய என் இந்த இடுகையைப் பார்க்கவும்: லஜ்ஜா கௌரி
திரிபுராந்தகர்
![]() |
| திரிபுராந்தகர் Source: https://www.deccanherald.com/spectrum/spectrum-top-stories/past-preserved-735815.html |
இந்த சிற்பமும் அடுத்துள்ள காலனைக் கடிந்த பெம்மான் சிற்பமும் பட்டடக்கல் விருபாக்ஷர் கோயிலில் இருந்து கிடைத்தன ஆகும். 8 ஆம் நூற்றாண்டு, சாளுக்கியர் கலை.
இந்த சிற்பம், அதன் பின் உள்ள புராணம் ஆகியன பற்றி அறிய என் இந்த இடுகையைப் பார்க்கவும். திரிபுராந்தகர்
காலனைக் கடிந்த பெம்மான்
கால ஸம்ஹார மூர்த்தி
![]() |
| கால ஸம்ஹார மூர்த்தி: பாதாமி அருங்காட்சியகம் Source: Archaeological Museum, Badami brochure |
இந்த சிற்பம், அதன் பின் உள்ள புராணம் ஆகியன பற்றி அறிய என் இந்த இடுகையைப் பார்க்கவும்: காலனைக் கடிந்த பெம்மான்
மற்ற காட்சிப் பொருட்கள்
- கிருஷ்ணருடைய கதையைச் சொல்லும் மூன்று நீண்ட கல் பலகைகள், பைரவர், சாமுண்டி, வீரபத்திரர், வாயிற்காவலர் முதலிய சிலைகள் .
- வீரக்கல்கள் பல வராந்தாவில் உள்ளன.
- பட்டடக்கல் ஜைனப் கோயிலை மறுநிர்மாணம் செய்த முறையை விளக்கும் படங்கள்
- இப்பகுதி வட, தென்னிந்திய கோயில் கட்டடக் கலையின் சங்கமம். இங்கு காணப்படும் நாகர, திராவிட, பம்சன, கஜபிருஷ்ட, மண்டப எனும் 5 வகை கோயில்களின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன.
- சீதளபாடி குகையின் மாதிரி
- குகைக்கோயில் 3 இல் இருந்த ஓவியத்தின் நகல்
அருங்காட்சியகத்தின் வாயிலருகே வைக்கப்பட்டுள்ள சிற்பங்கள்
![]() |
| பாதாமி அருங்காட்சியகம் இடது பக்கமுள்ள தூணில் பூரண கும்பங்கள். |
![]() |
| சிம்மாசனத்தின் மீது அர்த்த பத்மாசன நிலையில் தீர்த்தங்கரர், பாதாமி அருங்காட்சியகம் |
![]() |
| பாதாமி அருங்காட்சியகம் |
![]() |
| பாதாமி அருங்காட்சியகம் |
![]() |
| வாயில், பாதாமி அருங்காட்சியகம் |
முதலாம் நரசிம்ம பல்லவன் கல்வெட்டு
இரண்டாம் புலிகேசி பல்லவ அரசன் முதலாம் மகேந்திர வர்மனை (590 - 630) தோற்கடித்தார். முதலாம் மகேந்திர வர்மனின் மகன் முதலாம் நரசிம்ம வர்மன் பொ.ஆ. 642 இல் வாதாபியைத் தாக்கினார். அப்போரில் இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்டார். இரண்டாம் புலிகேசி இறந்தபின் 12 ஆண்டு காலம் வாதாபி பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த வெற்றியை நரசிம்ம வர்மன் பல்லவ கிரந்தத்தில் பதிவு செய்த கல்வெட்டு அருங்காட்சியகத்தின் வெளியே உள்ள பாறையில் உள்ளது. ஒரு சிறு பிற்கால மண்டபம் அதன் முன் உள்ளது.
![]() |
| முதலாம் நரசிம்ம பல்லவனின் கிரந்தக் கல்வெட்டு |













Comments
Post a Comment