பேகூரு பஞ்சலிங்கேசுவரர் கோயில்
பயணம்
03/06/2022; ஆண்டு வைகாசி மாதம் ஆம் நாள்
இடம்
- பேகூரு பெங்களூரு மாநகராட்சியின் தெற்கு எல்லையில் கரைந்து விட்ட ஒரு ஊர்.
- இதுவே பெங்களூரு பகுதியின் மிகப் பழமையான இடம். பொ.ஆ. 517 ஆண்டு மேலை கங்கர்களின் மலஹொள்ளி செப்புப் பட்டயத்தில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. பழம் கன்னட எழுத்து. இதில் 'பேம்புரீஷ்வர' என்னும் வார்த்தை வருகிறது. 'பேம்புர்' என்பது 'வேப்பூர்' - பேகூரின் ஒரு பழம் பெயர்.
![]() |
| படம் நன்றி: Twitter: Inscription Stones Of Bangalore @inscriptionblr |
பேகூரு நடுகல் கல்வெட்டு ஒன்றில்தான் முதன் முதலாக 'பெங்களூரு' என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த நடுகல் பேகூரு பஞ்சலிங்கேசுவரர் கோயில் வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காலம் சுமார் பொ.ஆ. 890 ஆண்டு. நாகத்தரன் என்ற கங்கர் படைத்தலைவன் மகன் புட்டனபதி, நாகத்தரன் வீட்டு மகன் பெர்வோணச் செட்டி ஆகியோர் நுளம்பர்களுடனான 'பெங்களூரு" போரில் இறந்த செய்தியை இந்த கல்வெட்டு பதிவு செய்கிறது.
![]() |
| 'பெங்களூரு' கல்வெட்டு - விளக்கப் பலகை |
பெங்களூரு மடிவாலா சோமேசுவரர் கோயிலில் பொ.ஆ. உள்ள ஒரு தமிழ் கல்வெட்டில் 'வெங்கலூர்' என்னும் இடப் பெயர் உள்ளது.
கோயில் வளாகம்
மைய பழம் கட்டுமானம் ஐந்து கோயிலகளைக் கொண்டது.
![]() |
| நன்றி: https://www.bmsca.org/research-and-consultancy.html |
- நாகரேசுசுவரர் -
- காரணேசுவரர்
- காலேசுவரர்
- நாகேசுவரர்
- சோழேசுவரர்
![]() |
| ஹென்ரி டிக்சன் 1868 இல் எடுத்த படம். from the Archaeological Survey of India Collections. (நன்றி:Henry Dixon (1824-1883), Public domain, via Wikimedia Commons) |
நாகேசுவரர் கோயில் (4)
![]() |
| கோயில் அதிஷ்டானம் 2022 ஜூன் |
- உபானம், ஜகதி, முப்பட்டைக் குமுதம், கம்புகளோடான கண்டம் மட்டுமே உள்ள அதிஷ்டானம்;
- கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபப் பகுதிகள் உள்ளன.
- கருவறை அதிஷ்டானம் இரு கர்ண பத்திகளையும் நடு சாலைப் பத்தியையும் காட்டுகிறது. பத்திகள் பத்ர பிதுக்கம் கொண்டுள்ளன.
- மகா மண்டபத்தின் நடுவில் நான்கு தூண்கள் உத்திரம் மட்டும் மேலே கொண்டு விளங்குகின்றன.
- சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டிகை வரையான் முழு அதிஷ்டானம் இருந்ததுவும், அதன் மீது செங்கல் சுவர் கூரைக் கோயிலும், அதன் முன் நந்தி மண்டபமும் இருந்தது பதிவாகி உள்ளது.
| 2014 இல் இதன் தோற்றம். (படம் நன்றி: https://indiancolumbus.blogspot.com/2014/10/begur-panchalingeshwara.html) |
![]() |
| படம் நன்றி: https://hybridindiatourpackages.in/bangalore/history-of-bangalore-bengaluru-3000-bce-to-present/ |
![]() |
| படம் நன்றி: https://hybridindiatourpackages.in/bangalore/history-of-bangalore-bengaluru-3000-bce-to-present/ |
கோயில் 1
![]() |
| நாகேசுவரர், நாகரேசுவரர் கோயில்கள் |
- இரு தல வேசர விமானம்
- உபபீடம் இல்லை.
- அதிஷ்டானம் ஸ்ரீகாந்தம் (பட்டிகைக்கு பதிலாக கபோதம் உடைய பாத பந்தம்)
- வேதி உண்டு.
- பிரம்மகாந்த தூண்கள்.
- பித்தி பக்கத்திற்கு இரு கர்ண பத்திகளும், நடு சாலைப் பத்தியும் கொண்டுள்ளது. அவை மூன்றும் பிதுக்கம் பெற்று பத்ரமாய் உள்ளன.
- கர்ண, சாலைப் பத்திகளுக்கு இடையே கபோத பஞ்சரங்கள் அகாரையை நிறைக்கின்றன. சாலைப் பத்தியில் கோட்டம் உள்ளது. இவை தேவ கோட்டங்களாக அமையாது ஆழமின்றி அலங்காரக் கோட்டங்களாக உள்ளன.
- அன்ன வலபி.
- ஹாரம் கர்ண கூடுகளும், நடுவில் சாலைகளும் பெற்றுள்ளது. இடைப்பட்ட அகண்ட ஹாராந்தரத்தில் நேத்ர நாசிகளில் கீழ் இரு விருத்த ஸ்புடிதங்கள் உள்ளன.
- ஹாரம் அர்த்தமண்டபம், மகா மண்டபங்கள் மீதும் தொடர்கின்றன. அர்த்த மண்டபத்தின் மீது பக்கத்திற்கு ஒரு சாலைப் பத்தி. மகா மண்டபத்தின் மீது பக்கத்திற்கு இரு கர்ண பத்திகள், நடுவில் சாலை. ஹாராந்தரத்தில் நேத்ர நாசிகள், கீழே இரு விருத்த ஸ்புடிதங்கள்.
- கர்ண கூடுகளும், சாலைகளும் நான்கு அங்கங்கள் கொண்டவை.
- இரண்டாம் தலமும் மூன்று பத்திகள் கொண்டுள்ளது. அவையும் பத்ரம் கொண்டுள்ளன.
- இரண்டாம் தல கர்ண பத்திகளின் மேல் கர்ண கூடுகள் உள்ளன.
- கிரீவத்தில் நான்கு கிரீவ கோட்டங்களும் அவற்றின் மீது மகா நாசிகளும் அமைந்துள்ளன. கிரீவமும், சிகரமும், ஸ்தூபியும் வேசரம். ஸ்தூபியும் கல்லாலானது.
கோயில் 2
இது ஒரு இரு தல நாகர விமானம். முதல் பார்வைக்கு ஒன்று போலத் தோன்றினாலும் பல வேறுபாடுகள் உள்ளன.
- அதிஷ்டானம் பிரதிபந்தம். பெரும்பகுதி புதைந்து விருத்த குமுதமும், வியாழ வரியுமே தெரிகின்றன.
- வியாழங்கள் சோழர் கலை போல ஒட்டி அமையாமல் இடைவெளியுடன் உள்ளன.
- அகாரை வெறுமையாக உள்ளது. கபோத பஞ்சரங்கள் இல்லை.
- பத்திகளின் பிதுக்கம் குறைவாக உள்ளது.
- ஹாராந்தரத்தில் ஒற்றை நாசியுடன் நாசி கோஷ்டமாய் உள்ளது. மகாமண்டபத்தின் ஹாராந்தரத்தில் மட்டும் நேத்ர நாசி கோஷ்டமாய் உள்ளது.
- இரண்டாம் தலப் பித்தியில் பத்திகள் தெளிவாகப் பிரிக்கப்படவில்லை.
- இரண்டாம் தலத்தின் மேல் மூலைகளில் கர்ணக் கூடுகளுக்குப் பதிலாக நந்திகள் உள்ளன.
- கிரீவமும், சிகரமும் நாகரமாய் இருக்க ஸ்தூபி மட்டும் வேசரமாய் உள்ளது.
கோயில் 3
![]() |
மாடமாளிகைகளின் பக்கத்தில் ஒரு எளிய குடிசையைப் போன்ற சிறு கோயில்.
கிரீவம், சிகரம் ஸ்தூபி ஆகிய மேல் உறுப்புகள் இல்லாத விமானம், அர்த்த மண்டபம், முக மண்டபம் உள்ளன.
ஒரு பகுதியில் முப்பட்டைக் குமுதம் மட்டும் தெரிகிறது.
சுவரில் தூண்களோ வேறு அழகுறுப்புகளோ இல்லை.
பிரஸ்தர உறுப்புகளும் இல்லை.
நான்கு ருத்ரகாந்த தூண்கள் தாங்கும் முக மண்டபத்தில் ஒரு சிறு நந்தி.
கோயில் 5
- ஒரு தல நாகர விமானம்.
- ஸ்ரீகாந்த அதிஷ்டானம்.
- வேதி இல்லை. சாலைப் பத்தி மட்டுமே பிரிக்கப்பட்டு பத்ரம் பெற்றுள்ளது.
- பூத வலபி.
- பூமிதேசத்தில் வியாழங்கள் இடைவெளியுடன் உள்ளன.
- நாகர கிரீவம், சிகரம்.
- வேசர ஸ்தூபி.
- 4 கிரீவ கோட்டங்கள், 4 மகா நாசிகள்
![]() |
| நந்தி தூண்கள் |
கல்வெட்டுகளும் நடுகற்களும்
பல நடுகற்கள் கோயில் வளாகத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
கோயிலின் தென்மேற்குப் பகுதியில் மதில் சுவரின் பக்கத்தில் சில கல்வெட்டுகள் இருமொழி விளக்கப் பலகைகளுடன் காட்சி படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று. முன்னரே குறிப்பிடப்பட்ட 'பெங்களூரு' நடுகல். அதில் குறிப்பிடப்பட்ட தலைவன் நாகத்தரன் பற்றிய மேலும் இரண்டு கல்வெட்டுகள் இங்கே உள்ளன.
![]() |
| நாகத்தரனைப் பற்றிய கல்வெட்டு. கல்வெட்டு விளக்கம் கீழே: |
மற்றொரு நடுகல் நாகத்தரன் மகள் தொண்டப்பே வின் சேவகர் ஒருவர் மரணம் அடைந்ததைக் குறிக்கிறது.
![]() |
| நாகத்தரன் மகள் தொண்டப்பே வின் சேவக்ர் நடுகல் |
இந்த தொண்டப்பே ஒரு ஜைனத் துறவியாய் சல்லேகனம் என்னும் ஜைன முறையில் உணவைத் துறந்து உயிர் நீத்ததாக பேகூர் கோட்டை வாயிலில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.
வீரனும், கொடையாளியும், அழகனும் ஆன நாகத்தரனின் மரணத்தைக் குறித்த பெரும் பேகூரு நடுகல் ஒன்று பெங்களூரு அருங்காட்சியகத்தில் உள்ளது.
கீழை சாளுக்கிய மன்னன் வீர மகேந்திரன், கண்டமகேந்திரன் என்னும் பெயர்களை உடைய இரண்டாம் பீமன் பொ.ஆ. 918 இல் நுளம்ப நாட்டைத் தாக்கியபோது கங்க மன்னன் இரண்டாம் எரகங்கன் நீதிமார்கன் நுளம்பர்களுக்குத் துணையாகத் தன் படைகளை களம் இறக்கினான். தும்பபாடி என்ற இடத்தில் நடந்த போரில் நாகத்தரன் இறந்தான். நாகத்தரன் இறந்த பிறகு பேகூரு பகுதிக்குத் தலைவனாகிய இருகாமையா என்பவன் இந்த கல்வெட்டை நிறுவினான்.
இவற்றைத் தவிர விளக்கப் பலகைகள் இல்லாமல் பல நடுகற்கள் கோயில், மதில் சுவர்களின் மீது சாற்றி வைக்கப்பட்டுள்ளன.
![]() |
| போரிடும் வீரனும் அவன் நாயும் (வீரன் உடலில் பல அம்புகள் தைத்திருப்பது காண்க) மேலே மேலுலகில் அமர்ந்திருக்கும் வீரன் |
![]() |
| மூன்றடுக்கு நடுகல் கீழ்ப் பகுதியில் ஆநிரை நடுப்பகுதியில் சண்டை மேல் பகுதியில் வீரன் மேலுலகில் அரம்பையரின் ஆடல் பாடலைக் கண்டவாறு அமர்ந்திருப்பது. |
மதில் கோபுரங்கள்
கோயிகளைச் சுற்றி மதிலும் வடக்கு தவிர்த்த மற்ற நான்கு பக்கங்களில் உயர்ந்த கோபுரங்களும் சமீபத்தில் கட்டபட்டுள்ளன. வடக்கு கோபுரம் கட்டப்பட்டு வருகிறது. கோபுரங்களின் தரைத் தளமும் மதிலும் கல் கட்டுமானம். கோபுரங்களின் மேல் தலங்கள் செங்கல், கிமென்ட் கட்டுமானம்.
கோபுரங்களைச் சுதைச் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. சிவ்ன் பார்வதி, வினாயகர், முருகன், வாயிற் காவலர்கள்.
![]() |
| கிழக்கு ஏழு நிலைக் கோபுரம் - உள்புறம் |
![]() |
| கிழக்கு ஏழு நிலைக் கோபுரம் - வெளிப்புறம் |
![]() |
| கிழக்கு கோபுரம் - வெளி வாயிலில் யானைகள் |
![]() |
| கிழக்கு கோபுரம் - பித்தி வேதி, அமர்ந்த நிலை சிம்மத் தூண்கள், பத்ம மண்டி, சாலை, கர்ணப் பத்திகள். அகாரையில் அரைத் தூண்களால் அணைக்கப்பட்ட கோட்டப் பஞ்சரம் |
![]() |
| கிழக்குக் கோபுரம் - பிரஸ்தரம் கபோதத்தின் மீது வேழச் செல்வி (கஜலட்சுமி), பத்ம வலபி, பூமி தேசத்தின் பிரதிவரியின் வெறுமையை புறாக்கள் போக்குகின்றன. |
![]() |
| கிழக்குக் கோபுரம் - மகரத்தின் மீது கங்கை கொடிப்பெண்ணாக |
![]() |
| கிழக்குக் கோபுரம்- உள் பகுதி |
![]() |
| கிழக்குக் கோபுரம்- உள் பகுதி |
![]() |
| கிழக்குக் கோபுரம்- கூரை |
![]() |
| ஐந்து நிலை தெற்கு கோபுரம் |
![]() |
| ஐந்து நிலை மேற்குக் கோபுரம் |
மேற்கு கங்க வம்சம்
காலம் பொ.ஆ. 350 - 999 சுமார் 650 ஆண்டுகள்.
முதல் 200 ஆண்டுகள் தனி அரசாக.
பின்னர் மேலைச் சாளுக்கியர்களின் கீழ் நட்பு கொண்ட சிற்றரசர்களாக.
ராஷ்ட்ரகூடர்களுடன் முதலில் பகை. பின்னர் மண உறவும், நட்பும்.
பொ.ஆ. 999 இல் சோழர்களால் முடிவு.
சோழர்களுக்குப் பின் ஹொய்சாளர்கள்.
ஆட்சிப் பகுதி - தற்போதைய மைசூர், ஹாசன், சாமராஜ நகர், தும்கூர், கோலார், மாண்ட்யா, பெங்களூரு.
சில காலம் கொங்கு பகுதி (6 ஆம் நூற்றாண்டு முதல்), ஆந்திரத்தின் அனந்தபூர் (5 ஆம் நூற்றாண்டு நடுப் பகுதியில் இருந்து)
முதல் மன்னர் - கொங்கனிவர்ம மாதவர் - தலைநகரம் கோலார்.
பொ.ஆ. 390 முதல் தலைநகரம் - தலக்காடு
முக்கிய மன்னர்கள்
துர்வினிதா, இரண்டாம் பூதுகன்
record of Ganga Ereyappa’ s at Begur near Bangalore refers to his war with theE. C ha} ukya king, calling Bhima II by the name ‘ Vira Mahendra and Gandamahendra ’. It makesout that Bhima attacked the Nojamba country, and that Ereyappa assisted Nolamba Ayyappa’sdefence against aggression. This must have taken place before a.d. 938 which was Ereyappa’slast year. There was a battle at Tumbepadi, and a Nagattara chief, feudatory to Ereyappa, losthis life. (











































Comments
Post a Comment