சோமேசுவரர் கோயில், ஹலசூரு, பெங்களூரு - பகுதி 4: கிரிஜா கல்யாணம்

ஹளசூரு சோமேசுவர் கோயிலில் சோமேசுவர் சன்னிதிக்கு வடபக்கம் காமாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. அதன் வெளிச்சுவரின் மூன்று பக்கங்களிலும் சிவன்-பார்வதி திருமணக் கதை நீண்ட தொடர்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது.

கிரிஜா கல்யாணம்

சிவன் பார்வதி திருமணக் கதை 'கிரிஜா கல்யாணம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கதை 'சிவமகாபுராணம்' முதலிய புராணங்களிலும், காளிதாசரின் 'குமார சம்பவம்' என்ற காப்பியத்திலும் விவரிக்கப் பட்டிருக்கிறது.

கதை

சக்தி இமைய மலையரசனின் தவத்திற்கு மகிழ்ந்து அளித்த வரத்தின்படி அவருக்கு மகளாகப் பிறந்தார். பார்வதி என்று பெயர் கொண்டார். கிரிராஜனின் மகள் ஆனதால் கிரிஜா. பார்வதி சிவனையே தன் கணவனாக வரித்து, அவரை அடையக் கடும் தவம் செய்தார். ஆனால் சிவனோ தனிமையில் யோகத்தில் மூழ்கி இருந்தார். தாரகாசுரனால் அடிமைகளாக்கப்பட்ட தேவர்களும் சிவ பார்வதி திருமணத்தை விரும்பினர். ஓப்புமை இல்லா வலிமை பெற்ற தாரகனின் மரணம் சிவ மைந்தனால் மட்டுமே நிகழும் என்பது பிரம்மன் தந்த வரம்.  இந்திரன் சொன்னபடி மன்மதன் ரதியோடு சென்று சிவனைச் சுற்றி வசந்த காலத்தை உருவாக்கினான். தன் மலர்க் கணைகளை அவர் மீது எய்தான். யோகம் கலைந்து சிவன் பார்வதி முன் தோன்றினார். அவளை மணக்க வாக்குறுதி அளித்தார். சப்த ரிஷிகளை அழைத்து, திருமணத்தை நிச்சயம் செய்யச் சொன்னார். அவர்கள் மலையரசனிடம் பேசி திருமண நாள் குறித்து கைலாயம் மீண்டனர்.

சிற்பத் தொடர்

இங்கிருந்து தொடங்குகிறது இந்த சிற்பக் கதை தொடர். இது அம்மன் சந்நிதி மகா மண்டபத்தின் தெற்குச் சுவரில் இருந்து தொடங்கி, அந்த மண்டபத்தின் வடக்குச் சுவரில்  முடிவடைகிறது.

காமாட்சி அம்மன் ஆலயம்
அ - கருவறை; ஆ - அர்த்த மண்டபம்; இ - இடைநாழி; ஈ - மகாமண்டபம்
1 - 11: கிரிஜா கல்யாணச் சிற்பத் தொடர்

காட்சி 1: மகா மண்டபத்தின் தெற்குச் சுவர்: கைலாயக் காட்சி 

1. கைலாயக் காட்சி
சப்த ரிஷிகள்பார்வதியுடன் சிவனின் திருமணத்தை மலையரசனிடம் பேசி நிச்சயித்த மங்கலச் செய்தியை சிவனிடம் சொல்கின்றனர்(இங்கு நால்வரே காட்டப்படுள்ளனர். அம்ர்ந்த நிலையில் சிவன் திருமால், பிரம்மா.


காட்சி 2: மகா மண்டபத்தின் மேற்குச் சுவர்: சிவன் இமயமலைக்குப் பயணம்

2. சிவன் இமயமலைக்குப் பயணம்
அடியவர் இருவர்; சிவன் ரிஷபத்தின் மீது; திருமால் கருடன் தாங்க; பிரம்மன் அன்னத்தின் மீது; விஸ்வகர்மா புஷ்பக விமானத்தில்

காட்சி 3: இடைநாழியின் தெற்குச் சுவர்: விஸ்வகர்மாவும் அடியவரும்

3. விஸ்வகர்மாவும் அடியவரும்
இங்கு விஸ்வகர்மா என்ன செய்கிறார்? எதை ஏன் அளந்து அடியவரிடம் கொடுக்கிறார்?

காட்சி 4: அர்த்த மண்டபத்தின் தெற்குச் சுவர்: சப்த ரிஷிகள், நந்தி, நாரதர்

திருமணத்திற்கு வந்தவர்கள் நிரை இங்கு தொடங்குகிறது. மணமக்களை வாழ்த்தியபடி மகிழ்ச்சி பொங்க நிற்கின்றனர்.

4. சப்த ரிஷிகள்
ஆதித்யன் ஒருவன் (மற்ற 11 பேர் அடுத்த காட்சியில்); சப்த ரிஷிகள் (எழுவர்); நந்தி, நாரதர் (கையில் மக்தி என்னும் வீணை)

காட்சி 5: கருவறையின் தெற்குச் சுவர்: ஆதித்யர்கள்

5. ஆதித்யர்கள்
ருத்திரர் ஒருவர் (கையில் திரிசூலம்;
12 ஆதித்யர்கள் 

காட்சி 6: கருவறையின் மேற்குச் சுவர்: ருத்ரர்கள்

6. ருத்திரர்கள்
சூலம் ஏந்திய 10 ருத்திரர்கள் (11 பேரில் ஒருவர் முந்தைய காட்சியில் உள்ளார். வடக்கில் வசுக்கள் எண்மருள் இருவர்

காட்சி 7: கருவறையின் வடக்குப் பக்கம்: வசுக்கள், அஷ்டதிக் பாலகர்கள்

7. வசுக்களும், அஷ்டதிக் பாலகர்களும்
வசுக்கள் எண்மரில் அறுவர் (இருவர் முந்தைய காட்சியில் உள்ளனர்)
அஷ்டதிக் பாலகர்கள்: 1. ஈசானன் (கையில் சூலம்); 2. குபேரன்; 3. வாயு; 4. வருணன் (கையில் பாசம்); 5. நிருத்தி; 6. எமன் (கையில் தண்டம்)

காட்சி 8: அர்த்த மண்டபத்தின் வடக்குச் சுவர்: கிரிஜா கல்யாணம்

8. கிரிஜா கல்யாணம்
நடுவில் நான்முகன் நெய்யூற்றி யாகத்தீ வளர்த்து மந்திரங்கள் ஓதி திருமணம் செய்து வைக்கிறார்.
அவர் முன் மணமக்கள் - சிவன், பார்வதி
இமயமலையரசன் (தலையில் கற்பாறை அடுக்கு மகுடம்) நீரூற்றி கன்னிகாதானம் செய்கிறார். அவர் பின்னால் அவர் மனைவி மேனா.
நான்முகனுக்குப் பின்னால் உள்ள சிறிய உருவம் யார்?
அதன் பின்னால் திருமால்.
அவர் பின்னால் இந்திரனும், அக்னியும் (தீச்சுடர்கள் எழுந்த இரு தலைகள்) (மற்ற 6 அஷ்டதிக்பாலகர்கள் முன் காட்சியில்)

காட்சி 9: இடை நாழியின் வடக்குச் சுவர்: ஏழு கன்னியர் (சப்த மாதர்)

9. ஏழு கன்னியர் (சப்த மாதர்கள்)
நமது வலமிருந்து இடமாக: 1. பிராம்மி (நான்முகம்), 2. மகேசுவரி, 3. கௌமாரி, 4. வைஷ்ணவி, 5. வராகி (பன்றிமுகம்), 6. இந்திராணி, 7. சாமுண்டி

காட்சி 10: மகா மண்டபத்தின் மேற்குப் பக்கம்;  கைலாயம் திரும்புதல்

10. மணமக்கள் கைலாயம் திரும்புதல்
சிவனும் பார்வதியும் ரிஷபத்தின் மேல்; திருமால் கருடன் மேல்; பிரம்மா அன்னத்தின் மேல்; விஸ்வகர்மா புஷ்பக விமானத்தில்

காட்சி 11: மகா மண்டபத்தின் வடக்குப் பக்கம்;  கைலாய வரவேற்பு

11. கைலாய வரவேற்பு
சிவன் பார்வதி, திருமால், நான்முகன், விஸ்வகர்மா அம்ர்ந்திருக்க கைலாயத்தில் வரவேற்பு நிகழ்ச்சி

கிரிஜா கல்யாண நிகழ்வு லெபாக்ஷி வீரபத்திரர் கோயில் நாட்டிய மண்டபத்திலும், ஹம்பி விருபாக்ஷர் கோயிலிலும் கூரையில் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. 

லெபாக்ஷி சித்திரத்தையும் அதைப் பற்றிய தகவல்களையும் அறிய காண்க:


ஹம்பி சித்திரத்தையும் அதைப் பற்றிய தகவல்களையும் அறிய காண்க:



சோமேசுவரர் கோயிலைப் பற்றிய மற்ற பகுதிகள்:





படிக்க






Comments

Popular posts from this blog

பெங்களூரு தொம்மலூரு சொக்கநாதர் கோயில்

பேகூரு பஞ்சலிங்கேசுவரர் கோயில்