அறிமுகம்
- பெங்களூரு அருங்காட்சியகம் கப்பன் பார்க் இன் தெற்குப் பக்கம் கஸ்தூரிபா சாலையில் (முந்தைய பெயர் சிட்னி சாலை) உள்ளது.
 |
| அரசு அருங்காட்சியகம் பெங்களூரு |
- தென்னிந்தியாவின் இரண்டாம் பழைய அருங்காட்சியகம் (முதல்: சென்னை).
- 18 ஆகஸ்ட் 1865 இல் எட்வர்ட் கிரீன் பல்ஃபர் (Edward Green Balfour) என்னும் அரசு மருத்துவரின் முயற்சியால் குட் ஷெப்பர்ட் வளாகத்தில் இருந்த ஒரு கட்டிடத்தில் துவங்கப்பட்டது. அந்த சாலை இன்றும் மியூசியம் சாலை என்று அழைக்கப்படுகிறது.
- தற்போதைய இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு 1877 இல் Mysore Government Museum (மைசூர் அரசு அருங்காட்சிகம்) என்ற பெயரில் திறக்கப்பட்டது.
 |
Government_Museum,_Bangalore_(1890)_from_the_Curzon_Collection's_'Souvenir_of_Mysore_Album'
Source: Wikipedia) |
- வடிவமைத்தவர் Sir Richard Hieram Sankey, அன்றைய மைசூர் அரசின் முதன்மைப் பொறியாளர்.
- 1960-62 இல் அதே போன்ற இன்னொரு பகுதி கட்டப்பட்டு இணைக்கப்பட்டது.
 |
| பெங்களூரு அரசு அருங்காட்சியகம் 2019 |
- பெங்களூரு அரசு அருங்காட்சியகம் ஒரு தொல்பொருள் அருங்காட்சியகம்.
2019 டிசம்பர் 19 ஆம் தேதி பெங்களூரு அருகாட்சியகத்திற்கு சென்றிருந்தேன். நுழைவுக் கட்டணம் ரூ 20. கைப்பேசியில் புகைப்படம் எடுக்காத தடை இல்லை. அங்கிருந்த சிற்பங்களை மட்டுமே முக்கியமாக பார்த்தேன். பின்வரும் பதிவுகள் அங்கு நான் கண்ட சிற்பங்களைப் பற்றியே.
Comments
Post a Comment