கிழக்கு பூதநாதர் (தட்டுகோடி) கோயில்கள்

பாதாமி அருங்காட்சியகத்திலிருந்து கிழக்கு நோக்கிச் சென்றால் அகத்திய தீர்த்தத்தின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது வடக்கு பூதநாதர் கோயில் கூட்டம். இவை தட்டுக்கோடி கோயில்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. 

வடக்கு பூதநாதர் (தட்டுகோடி) கோயில்கள் 
Naane.naanu / CC BY-SA (https://creativecommons.org/licenses/by-sa/3.0)

இந்த கோயில்கள் கல்யாணி சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. இவை சில பொதுவான கோயில் கலை வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளன.

  1. கடம்ப (பம்சன) பாணி விமானம் 
  2. சரிந்த கூரைகளுடைய மண்டபங்கள் 
  3. கடைவுத் தூண்கள் 
  4. திறந்த வெளி மண்டபங்களைச் சுற்றிய கக்ஷசனம் என்னும் திண்ணை அமைப்பு.
  5. மண்டபக்கூரைகளில் தாமரைச் சிற்பங்கள்.
  6. அரைத் தூண்கள், தெய்வ கோட்டங்கள் அற்ற எளிய வெளிச் சுவர்கள்.

வடக்கு பூதநாதர் கூட்டத்தின் முதன்மைக் கோயில்.

இங்குள்ள கோயில்களுள் முதன்மையான கோயில் முன் மண்டபம், உள் மண்டபம், இடை நாழி, கருவறை கொண்டுள்ளது. 

முன் மண்டபம்

உள் மண்டப வாயில்
மேலே வேழச்செல்வி (கஜலக்ஷ்மி)


உள் மண்டபம்

உள்மண்டப கூரை கவிழ் தாமரை

இடைநாழி வாயில்

கருவறை

கடம்ப (பம்சன) சிகரம்

கடம்ப சிகரம் சதுரமானது. ஒன்றன் மீது ஒன்றாக கிடைமட்டமாய் அடுக்கப்பட்ட படிகளைக் கொண்டது. படிகள் மேலே செல்லச் செல்ல சிறுத்து சிகரத்திற்கு பட்டைக்கூம்பு (பிரமிடு) வடிவத்தை அளிக்கின்றன. வெளிப்புறம் படிகளுக்கிடையே இடைவெளிகளுடன் அமைந்தது. அந்த இடைவெளிகளை படிகளில் சம இடைவெளியில் தொடர்ந்து அமைந்திருக்கும் சிறு சதுர எறியல்கள் (projections) அணி செய்கின்றன. முன்புறம் நீட்டிக்கொண்டிருக்கும் கிளிமூக்கு (சுகநாசி) உள்ளது. அதிலுள்ள யோக நாராயணர் சிற்பம் இந்தக் கோயிலை திருமால் கோயிலாக அடையாளம் காட்டுகிறது. ஆனால் தற்போது கருவறையில் லிங்கம் உள்ளது. மேலே  கழுத்து (கிரீவம்), நான்கு பட்டை சிகரம், கலசம் ஆகியன உள்ளன.

அடுத்துள்ள கோயில் முன் மண்டபத்தை இழந்திருந்தாலும் சில சிறப்புகளைப் பெற்றிருக்கிறது. 

  • அதன் கடம்ப சிகரத்தில் பக்கங்களில் கீழிருந்து மேல்வரை பட்டை ஒன்று உள்ளது. அதை மூன்று கீர்த்தி முகங்கள் அணி செய்கின்றன.
  • மண்டபத்தின் நான்கு மூலைகளிலும் நடுவிலும் ஒரு சிறு கடம்ப சிகரம் உள்ளது. 


இடைநாழி வாயில்


சிறு கோயில்.

கூரை சிற்பங்களுள் சில.




நன்றிக்கடன் 

Badami, Heritage Series, Dr Shrinivas V Padigar; Dept of Archeology, Museums & Heritage Bangalore; First Edition; 2012


Comments

Popular posts from this blog

சோமேசுவரர் கோயில், ஹலசூரு, பெங்களூரு - பகுதி 4: கிரிஜா கல்யாணம்

பெங்களூரு தொம்மலூரு சொக்கநாதர் கோயில்

பேகூரு பஞ்சலிங்கேசுவரர் கோயில்