பூதநாதர் கோயில்
அகத்தியர் தீர்த்தத்தின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது பூதநாதர் கோயிலும் அதைச் சுற்றியுள்ள சிறு கோயில்களும்.
![]() |
| பூதநாதர் கோயிலும் அதைச் சுற்றியுள்ள சிறு கோயில்களும் |
உயர்ந்த விமானத்துடன் நடுநாயகமாகக் காணப்படுவது பூதநாதர் கோயில். பூதநாதர் என்னும் பெயர் பூதகணங்களின் தலைவன் என்று பொருள்பட்டு சிவனைக் குறிக்கும். இது 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. சாளுக்கியர்கள் பாதாமியில் கட்டிய கோயில்களில் இறுதியானதாக இருக்கலாம். இதைச் சுற்றியுள்ள கோயில்கள் ராஷ்டிரகூடர் காலத்தவை.
![]() |
| பூதநாதர் கோயிலும் அதைச் சுற்றியுள்ள சிறு கோயில்களும் |
பூதநாதர் கோயில் மூன்று தள திராவிட வகை விமானம், இடைநாழி, மண்டபம், முன்மண்டபம் ஆக்கியவற்றைக் கொண்ட மேற்கு நோக்கிய கோயில்.
கட்டப்பட்டபோது முன் மண்டபம் நான்கு துண்களைக் கொண்ட சிறு மண்டபமாக இருந்தது. கீழுள்ள படத்தில் விமானத்தின் தரைத்தளத்தின் மீதுள்ள ஆரச் சுவர் மண்டபத்தின் மீதும் முன்பண்டபத்தின் மீதும் நீண்டுள்ளது. இந்த நான்கு தூண் மண்டபத்தைச் சுற்றி கல்யாணிச் சாளுக்கியர்கள் காலத்தில் (11-12 ஆம் நூற்றாண்டு) சரிந்த கூரையுடன் மண்டபம் விரிவுபடுத்தப்பட்டது.
![]() |
| தூண்கள்: வலதுபுறம் சாளுக்கியர் கால 4 தூண்களில் ஒன்று. இடதுபுறம் அதையொட்டிய கல்யாணி சாளுக்கியர் கால கடைவுத் தூண். |
![]() |
| சாளுக்கியர் தூணின் தரங்க போதிகை . அதன் நடுவே ஒரு யாளி. தூணின் மேற்பகுதியில் அழகிய வேலைப்பாடுகள். பின்புலத்தில் நந்தி. |
![]() |
| விரிவாக்கப்பட்ட மண்டபமும், நந்தியும், சுற்றி கக்ஷசனம் எனும் திண்ணையும் |
, .
முன் மண்டபத்தில் இருந்து உள் மண்டபத்திற்கு செல்லும் வாயிலின் இருபுறமும் இருந்த வாயிற்காவலர் சிலைகள் உடைத்து அகற்றப்பட்டுள்ளன. தலையின் மேல் உள்ள முச்சூல அமைப்பு இந்த வாயிற்காவலர் சூலதேவர் என்று காட்டுகிறது.
![]() |
| வாயிலில் சூலதேவர் சிலை இருந்ததற்கான அடையாளம். |
![]() |
| வாயிற்படி |
உள் மண்டபம் கருவறை நோக்கிச் செல்லும் உயர்ந்த வேலைப்பாடுடைய சமதள கூரையையும் இருமருங்கும் சரிந்த கூரைகளைக் கொண்ட பகுதிகளையும் கொண்டுள்ளது. கருவறையை சுற்றி செல்ல வழி இல்லை. தூண்கள் தரங்கம் மீது யாளி உள்ள பொதிகை கொண்டுள்ளது. வேலைப்பாடற்ற சதுர, பிறை அலங்காரம் கொண்டுள்ளது.
![]() |
| மண்டபத்தின் உயர்ந்த கூரை. அதில் தாமரைப் பதக்கங்கள் |
![]() |
| கருவறையும், லிங்கமும் வாயிலின் கீழ்ப் பகுதியில் யமுனையும் கங்கையும் |
![]() |
| யமுனை ஆமை வாகனத்தின் மீது. கூட பணிப்பெண் |
![]() |
| கங்கை முதலை (மகர) வாகனத்தின் மீது கூட குடை தாங்கிய பணிப்பெண். |
பூதநாதர் கோயிலின் வடகிழக்கில் லகுலீசர் கோயில் என்னும் சிறு கோயில் உள்ளது. இதன் விமானத்தின் மேல்பகுதி காணப்படவில்லை.
![]() |
| லகுலீசர் கோயில் |
![]() |
| உள் மண்டபம், கல்யாணி சாளுக்கியர் கடைந்த தூண்கள். |
![]() |
| உள் மண்டபம், இன்னொரு பார்வை |
விமானங்களை அதனுள்ளேயே கருவறையைச் சுற்றிவர வழி உள்ளதா என்பதைப் பொறுத்து இருவகையாகப் பிரிக்கலாம். வழி இருந்தால் 'சந்தர' வகை. விமானம் தரைத் தளத்தில் இரு சுவர்கள் கொண்டிருக்கும். இவற்றுக்கிடையே சுற்று வழி இருக்கும். சுற்று வழி இல்லாத ஒற்றைச் சுவர் விமானங்கள் 'நிரந்தர விமானம் எனப்படும். இந்தக் கோயில் சந்தர வகை விமானம் உடையது. சுற்று வழி கொண்டது. அந்த வழியில் சில சிற்பங்கள் காணப்படுகின்றன.
![]() |
| லகுலீசர் கோயில் கருவறை சுற்று வழி. |
![]() |
| லகுலீசர் கோயில் கருவறை |
கருவறையில் உள்ள திருவுருவம் லகுலீசர் என்று கருதப்பட்டு கோயிலும் அவ்வாறே பெயர் பெற்றுள்ளது. ஆனால் இது வலது கரத்தில் குத்துவாளுடன் கூடிய இருகை பைரவர் என்பது இப்போதைய கருத்து. இந்த திருவுருவம் பூதேசுவரர் கோயிலில் இருந்த பூதநாதராக இருக்க வாய்ப்பு உண்டு.
![]() |
| லகுலீசரா? பைரவரா? |
சுற்றியுள்ள கல்யாணி சாளுக்கிய கால பல சிறு கோயில்களில் வாயிலின் மேற்புறம் வேழச்செல்வியும் (கஜலக்ஷ்மி), பக்கங்களில் மகிடற்செற்றாள் (மகிஷாசுரமர்த்தினி), பிள்ளையாரும் காணப்படுகின்றனர்.
![]() |
| கருவறை வாயில் மேற்புறம் வேழச்செல்வி, பக்கங்களில் மகிடற்செற்றாள், பிள்ளையார், இருபுறத் தூண்களில் வாயிற்காவலர். |
![]() |
| திருமால் செல் ஆழியும் (பிரயோக சக்கரம்), சங்கும், காலருகே கருடன். |
![]() |
| வேழச்செல்வி |
அருகிலுள்ள கற்பாறைகளில் சில சிறு சிற்பங்கள்.
![]() |
| 1880s photograph by Henry Cousens (d. 1933[1]) of cliffs overlooking the Bhutanatha Temple Complex on the eastern end of the artificial lake in en:Badami, en:Karnataka, India. (Oriental and India Office Collection, British Library.) Downloaded and reduced by Fowler&fowler «Talk» 20:05, 21 April 2008 (UTC) from the British Library Website. https://commons.wikimedia.org/wiki/File:Cliffs_overlooking_lake_badami.JPG |
நன்றிக்கடன்
* Badami, Heritage Series, Dr Shrinivas V Padigar; Dept of Archeology, Museums & Heritage Bangalore; First Edition; 2012
Badami Aihole Pattadakkal; George Michell; Jaico/ Deccan Heritage Foundation





























Comments
Post a Comment