சோமேசுவரர் கோயில், ஹலசூரு, பெங்களூரு - பகுதி 2: வெளித் திருச்சுற்று

 சோமேசுவரர் கோயில் இரு திருச்சுற்றுகளைக் கொண்டது.

1. நந்தி தூண்; 2. கோபுரம்; 3. பீமேசுவரர் சந்நிதி; 4. நஞ்சுண்டேசுவரர் சந்நிதி; 5. வாகன அறை; 6. ஆஞ்சனேயர் சந்நிதி; 7. நவகிரக சந்நிதி; 8. விநாயகர் சந்நிதி; 9. நந்தி மண்டபம்; 10. உள் திருச்ற்று; 11. சிவன் சந்நிதி; 12. காமாட்சி சந்நிதி; 13. கல்யாணி

மதில்

கோபுரத்தை ஒட்டிய மதிலின் பெரும் பகுதி தற்கால கட்டுமானம். 2017 நவம்பரில் மதில் சேதமடைந்து இருந்தது செய்தியாக வெளிவந்துள்ளது.

மதில் 2017. நன்றி: மேற்படி செய்தித்தாள் செய்தி

பின்னர் மதில் புனரமைக்கப்பட்டு, பழைய மதில் வடக்குப் பகுதியில் மட்டுமே காணக் கிடைக்கிறது.

மதில் ஜூன், 2022

கோபுரத்தின் உள் நுழைந்ததும் வெளித் திருச்சுற்றில் தெற்கில் பீமேசுவரர், தென்கிழக்கில் நஞ்சுண்டேசுவரர் சன்னிதியும் முருகர், விநாயகர் சிலைகளும், வடகிழக்கில் விநாயகர், நவக்கிரக சன்னிதிகளும், வடக்கில் ஆஞ்சனேயர் சந்நிதி, அதன் பக்கத்தில் அரச மரத்தடியில் நாக தேவதைகளும் உள்ளன.  உள்ளன. இவை அனைத்தும் தற்கால கட்டுமானங்கள்.

சோமேசுவரர் சன்னிதியின் உள் திருச்சுற்றின் முன் நந்தி மண்டபம் உள்ளது. தெற்கில் கிழக்கு நோக்கில் காமாட்சி அம்மன் சன்னிதி அமைந்துள்ளது.

நந்தி மண்டபம்

மூலக்கோயிலின் முன் அமைந்துள்ள இந்த மண்டபத்தில் மூன்று பக்கங்களிலும் படிகள் (சோபானம்) அமைந்துள்ளன.  அவற்றின் பக்கச் சிற்பங்கள் மழுங்கிப்போய் உள்ளன. மண்டபத்தின் கிழக்குப் பகுதி வெளிநீண்டுள்ளது.

நந்தி மண்டபம் - நுழைவுத் தோற்றம்

அதிஷ்டானம் உபானம், பத்மஜகதி, கண்டம், கபோதம் ஆகிய உறுப்புக்களைக் கொண்டுள்ளது.

நந்தி மண்டபம் - அதிஷ்டானம்

தூண்கள்

நந்தி மண்டபத்தில் 48 தூண்கள் உள்ளன. மூன்று பக்கம் சோபானங்களின் இருபுறமும் என 6 யாளி வீரர்கள் தூண்கள். 

நந்தி மண்டபம் - சோபானத்தின் இருபுற யாழித் தூண்கள்,
கொடுங்கை

கொடுங்கை நாகம்

மூலைகளில் மூன்று சிறு கால்களுடனான 6 கூட்டுத் தூண்கள். 

மூலையில் கூட்டுத் தூண்கள்

யாழித் தூண்களுக்கும் மூன்று சிறு கால் கூட்டுத் தூண்களுக்கும் இடையேயும், மைய நடையின் இருமருங்கிலும் ஆக 16 ஒற்றைச் சிறு கால் தூண்கள்.

கூட்டுத் தூண்

கூட்டுத் தூண்

மண்டபத்தின் முதன்மைப் பகுதிக்கும் கிழக்கு நீட்சிக்குமான இரு மூலைகளில் வேறொரு வகைத் தூண்கள் 2 உள்ளன.

மூலை இணைவுத் தூண்கள்
அமாவாசை காரணமாக நீண்ட வரிசை

மற்றவை சித்ரகண்டத் தூண்கள். 

சித்திரக் கண்டத் தூண்
கீழ் சதுரம் -  சிம்மம்; நடு சதுரம் - நாகம் சுற்றிய லிங்கம்;
மேல் சதுரம் - ரிஷபம்

சுவர் சிற்பங்கள்

நந்தி மண்டபத்திலிருந்து முதல் திருச்சுற்றுக்கு செல்லும் வாசலின் தென்புறம் ராவணன் கைலாயத்தைத் தூக்கும் சிற்பமும், வடபுறம் மகிஷாசுர மர்த்தினி சிற்பமும் உள்ளன.

மகிஷாசுரமர்த்தினி

ராவணன் கைலையைத் தூக்கி மிதிபடுவது

மேற்கண்ட சிற்பங்களின் பக்கச் சுவர்களில் உள்ள சிற்பங்கள்:



தூண் சிற்பங்கள்

தூண்களின் மூன்று சதுரங்களின் நான்கு பக்கங்களிலும் சிறு சிற்பங்கள் உள்ளன.

பல தூண்களின் அடிச் சதுரங்களின் நான்கு பக்கங்களிலும் சிம்மங்களின் சிற்பங்களே உள்ளன. பெரும்பாலும் நேர் நோக்குடன் அமர்ந்த நிலையில் இருந்தாலும் மற்றவற்றில் வெவ்வேறு நிலைகளில் உள்ளன.

நாத சித்தர்கள்

வராகநாதர்

பைரவநாதர்


நவநாதர்கள் என்னும் 9 சித்தர்களின் சிற்பங்கள் வரிசையாக உள் திருச்சுற்றின் தெற்குச் சுவரின் வெளிப்பக்கத்தில் உள்ளது இந்த கோயிலின் சிறப்புகளுள் ஒன்று. (காண்க: சோமேசுவரர் கோயில், ஹலசூரு, பெங்களூரு - பகுதி 3: உள் திருச்சுற்று)

நாகலிங்கம்


லிங்க பூஜை செய்யும் அனுமன்
(பாடல் பெற்றத் தலமான குரங்கணில்முட்டத்தில்
வாலி லிங்க பூஜை செய்ததாகவும் தொன்மம் உண்டு)

தெய்வங்கள்

வீரபத்திரர்

ரிஷபாந்திகர்

யோக நரசிம்மரும் இரண்யனை
வதைக்கும் நரசிம்மரும்

மிருகங்கள்

அண்டரண்ட பட்சி
இரு யானைகளை காலுக்கடியில் நசுக்கி கைகளில் இரு யானைகளை தூக்கியுள்ள பேருருவக் காட்சி

குரங்கு வளையம்
இரு தலைகள், 4 உடல்கள்

குரங்கு


மகரங்கள்

அன்னம்

மக்கள்


உத்திர வேலைப்பாடுகள்

உத்திர வேலைப்பாடுகள்

உத்திர வேலைப்பாடுகள்

உத்திர வேலைப்பாடுகள்


படிக்க







Comments

Popular posts from this blog

சோமேசுவரர் கோயில், ஹலசூரு, பெங்களூரு - பகுதி 4: கிரிஜா கல்யாணம்

பெங்களூரு தொம்மலூரு சொக்கநாதர் கோயில்

பேகூரு பஞ்சலிங்கேசுவரர் கோயில்