சோமேசுவரர் கோயில் பெங்களூரு வின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்று. மூலவர் கருவறை 11 ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சியில் கட்டப்பட்டது. 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் ஆட்சியில் விரிவாக்கப்பட்டது.
விஜயநகர அரசர்களின் கீழ் யெலஹங்காவை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த 'யெலஹங்கா நாடப் பிரபுக்கள்' என்னும் சிற்றரசர்களில் ஒருவன் ஜயப்ப கௌடா (பொ.ஆ. 1430-1450). அவன் ஹலசூரு பகுதியில் காட்டில் வேட்டையாடியபோது களைப்பினால் ஒரு மரத்தின் கீழ் படுத்து உறங்கினான். அப்போது அவன் கனவில் வந்த ஒருவர் "நீ உறங்கும் இடத்தின் கீழ் ஒரு சிவலிங்கம் உள்ளது. அதை வெளிக்கொணர்ந்து கோயில் எழுப்புக" என்றார். அவனும் அவ்வாறே செய்தான் என ஒரு கதை உள்ளது.
இடம்
பெங்களூருவில் ஹலசூரில் உள்ளது
பயணம்
30/05/2022 அன்று இந்த கோயிலுக்குச் சென்றேன். அதன் சிற்பங்களைக் கண்டு பெருவியப்படைந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தால் சிற்பங்கள் பலவற்றை அடையாளம் காண முடிந்திருக்காது. இடையில் கற்றவை உதவின.
நந்தித் தூண்
கோபுரத்தின் முன் உயரமான நந்தித் தூண் உள்ளது. உயரமான உபபீடம், அதிஷ்டானத்தின் மீது நிற்கிறது. அஷ்டாங்க உபபீடம். பத்ம ஜகதி, கபோதம் உடைய பாத பந்த அதிஷ்டானம். தூண் அடியில் நான்கு பட்டை. மேலே எட்டு பட்டை. அதன் மேல் நான்கு கைப் போதிகை. பெருமாள் கோயில்களில் காணப்படும் கருடத் தூண்களை ஒத்தது. ஆனால், கருடத்தூண்களில் அடியில் நான்கு சதுரங்களில் சங்கு, சக்கரம், பெரிய திருவடி, சிறிய திருவடி சிற்பங்கள் என அவர்களின் திசைகள் உள்பட முறைசெய்யப்பட்டுள்ளது போல சிவன் கோயில் நந்தி தூண்களில் செய்யப்படுள்ளதாகத் தெரியவில்லை. வெவ்வேறு கோயில் நந்தித் தூண்களில் சிற்பங்களும் திசைகளும் வேறுபடுகின்றன.
 |
| நந்தித் தூணும் பின்னால் ஐந்து நிலை கோபுரமும் |
 |
சோமேஸ்வரர் ஆலயம் 1890 இல் உபபீடம் உடைந்து இருப்பதையும், போதிகை உபபீடத்தின் மீது இருப்பதையும் காண்க. தேரின் அடிப்பகம், மாட்டு வண்டி, பழைய மதில், அக்கால மனிதர்கள் காண்க. (Unknown author, Public domain, via Wikimedia Common from online gallery of British Library) |
தூணின் அடிப்புற சதுரத்தின் நான்கு பக்கங்களிலும் அழகிய சிற்பங்கள் உள்ளன.
 |
| கிழக்கில் காளி |
 |
| தெற்கில் வீரபத்ரர் |
 |
| மேற்கில் விநாயகர் |
 |
| வடக்கில் ரிஷபம் |
கோபுரம்
கிழக்கில் மட்டும் ஒரு கோபுரம். ஐந்து நிலை கொண்டது.
 |
கோபுரம் உள்ளே இருந்து
|
உபபீடம், அதிஷ்டானம்
 |
உபபீடமும் அதிஷ்டானமும் உபபீடம் உபானம், பத்மமம், பட்டிகை, கபோதம், பிரதிவரி கொண்டு பட்டிகைக்கு கீழ் ஒரு சிறு கண்டம், மேலே ஒரு அகன்ற கண்டம் பெற்று கண்டங்களின் இருபுரமும் கம்பு, சிறு பத்மங்கள் உடையதாய் உள்ளது. இது பிரதிபத்ர 3 ஆம் வகை (மானசாரம்) உப பீடம் எனலாம். அதிஷ்டானம் மூன்று பத்திகளாகப் பிரிந்து பத்ரங்களாய் உள்ளது. மேலும் அது வர்க்க பேதம் கொண்டுள்ளது. கர்ண பத்தி உபானம், பத்ம ஜகதி, 16 பட்டை குமுதம், அதன் மேலும் கீழும் கம்பு சிறு பத்மங்களால் அணைக்கப்பட்ட கண்டங்கள், கபோதம், கபோதத்தின் மீது பிரதிவரி கொண்ட பத்ம கபோத பிரதி பந்தமாய் உள்ளது. பஞ்சர பத்தி ஜகதி, 8பட்டை குமுதம், பட்டிகை கொண்டு பாதபந்தமாய் உள்ளது. அகன்ற ஜகதியில் மூன்று யானைகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. சாலை பத்தி இரு பகுதிகளாக உள்ளது. வாயிலை அடுத்த பகுதி பாத பந்தமாயும், மற்றது பிரதிபந்தமாயும் உள்ளது.இது பிரதிபந்தத்தை வெட்டக் கூடாது என்பதற்காக இருக்கலாம். உள் ஒடுங்கிய அகாரைப் பகுதி பிரதிபந்தத்தின் தொடர்ச்சியாய் உள்ளது.
|
 |
| பஞ்சர பத்தியின் பாத பந்த ஜகதியில் யானை வரிசை |
 |
| அதிஷ்டானச் சிற்பம் - கோபுரத்தின் வடகிழக்குப் பகுதி |
 |
| உபபீட கபோதத்தின் நாசிகள் |
பித்தி
 |
பித்தி - கோபுர கல்ஹாரத் தரைத் தலம் - உள்புறம்
பித்தியில் வேதிகை உள்ளது. பித்தி ஒவ்வொரு பக்கத்திலும் 12 தூண்களைக் கொண்டு இரு கர்ண பத்திகள், இரு பஞ்சர பத்திகள், ஒரு சாலைப் பத்தி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. சாலைப் பத்தி நான்கு தூண்களுடன் சுபத்ரமும், 2 உபபத்ரங்களும் பெற்றுள்ளது. அகாரைகளை கும்பபஞ்சரங்கள் அணி செய்கின்றன. கிழக்கிலும் மேற்கிலும் சுபத்ர சாலைப்பகுதியில் வாயில் அமைதுள்ளது. தூண்கள் பிரம்ம காந்தம். உடல் பகுதியில் இலைக்கருக்கு அலங்காரங்கள் உள்ளன. மாலைத் தொங்கல் முதல் வீர கண்டம் வரையான உறுப்புகள் கொண்டுள்ளன. மண்டி சதுர பத்மம். வெட்டுப்போதிகை. அதன் முன் பக்கங்களை அமர்ந்த நிலை யாளிகள் அலங்கரிக்கின்றன. |
பித்தி சிற்பங்கள்
பத்திகள், கும்ப பஞ்சரத்தின் பக்கங்கள் ஆகியவற்றை சிற்பங்கள் அழகு செய்கின்றன. பத்திகளில் திருவாசியின் கீழ் தெய்வங்கள் உள்ளன. கும்பபஞ்சரங்களின் இரு பக்கங்களில் மற்ற சிற்பங்கள் உள்ளன.
வடக்கு பக்கம்
 |
கோபுரம் வடக்குப் பக்கம் மேற்குப்பகுதி நடுநாயகமாக சாலைப்பத்தியில் பிரம்மா, பக்கத்தில் அடியவர்; பஞ்சர பத்தி - பிச்சாண்டவர்; கும்பபஞ்சரங்களின் இருபுறம் - தன்னிலை மறந்த ரிஷி பத்தினிகள், கூத்தாடும் கணங்கள்; கர்ண பத்தி - வீரபத்திரர்; |
 |
கோபுரம் வடக்குப் பக்கம் கிழக்குப் பகுதி கர்ண பத்தி - மகிஷசுரமர்த்தினி; கும்பபஞ்சரத்தின் இருபுறம் - நந்தி, அடியவர்; பஞ்சர பத்தி ரிஷபாந்திகர்; கும்பபஞ்சரத்தின் இருபுறம் - பார்வதி?, (யார்?) |
தெற்கு பக்கம்
 |
தெற்கு பக்கத்தின் மேற்குப் பகுதி நடுநாயகமாக சாலைப் பத்தியில் தட்சிணாமூர்த்தி அவர் வலது புறம் முனிவர் கர்ண பத்தி - சிவன்?; கும்பபஞ்சரத்தின் இருபுறம் - பணிப்பெண், பார்வதி; பஞ்சர பத்தி திரிபுராந்தகர்; கும்பபஞ்சரத்தின் இருபுறம் - (யார்?), முனிவர்; |
 |
தெற்கு பக்கத்தின் கிழக்குப் பகுதி சாலைப் பத்தியில் உள்ள தட்சிணாமூர்த்தியை (இந்த படத்தில் தெரியவில்லை) வணங்கும் அடியவர். பஞ்சர பத்தியில் ஹரிஹரர் (வலது கைகளில் சூலம், டமருகம்; இடது கைகளில் சங்கு, சக்கரம்) அவரது வலது புற கும்ப பஞ்சரத்தின் பக்கத்தில் பார்வதி, நந்தி; இடதுபுறம் திருமகள், பணிப்பெண் கர்ண பத்தி - பைரவர் |
கிழக்குப் பக்கம்
 |
கிழக்கு பக்கத்தில் தெற்குப் பகுதி பஞ்சர பத்தியிலும் கர்ண பத்தியிலும் சிவன்; இரு கும்ப பஞ்சரங்களின் பக்கங்களில் பார்வதி (மகுடம், கையில் மலர்), பணிப்பெண்கள் (கொண்டை, கையில் சாமரம், சாலைப் பத்தியில் வாயிற் காவலர். |
 |
கிழக்கு பக்கத்தில் வடக்குப் பகுதி நடுநாயகமாக பஞ்சர பத்தியில் நடராஜர்; அவர் வலப்புறம் கும்ப பஞ்சரத்தின் பக்கங்களில் பிரம்மா, நந்தி, இடது பக்க கும்ப பஞ்சரத்தின் பக்கங்களில் மிருதங்கம், ஊதுகுழல் ஊதும் கந்தர்வர்கள்; கர்ண பத்தி - வீணாதரர் சாலைப் பத்தி - வாயிற் காவலர், |
மேற்குப் பக்கம்
 |
மேற்குப் பக்கத்தில் தெற்குப் பகுதி நடுநாயகமாக பஞ்சர பத்தியில் வேணுகோபாலர், அவரது வலது பக்க கும்பபஞ்சரத்தின் பக்கங்களில் சேடி, தேவி;அவரது இடது பக்க கும்பபஞ்சரத்தின் பக்கங்களில் இரு தேவியர்; (வேணுகோபலரின் இரு பக்கங்களில் சத்யபாமா, ருக்மிணியும் விஷ்ணுவின் பக்கத்தில் திருமகளும் ஆக இருக்கலாம்) கர்ண பத்தியில் விஷ்ணு சாலைப் பத்தி - வாயிற் காவலர் |
 |
மேற்குப் பக்கத்தில் வடக்குப் பகுதி நடுநாயகமாக பஞ்சர பத்தி - நடன் கணபதி, அவரது இரு புறமும் கும்ப பஞ்சரத்தின் பக்கங்களில் அவருடன் நடனம், இசையில் ஈடுபட்டுள்ள கணங்கள்; சாலைப் பத்தியில் வாயிற் காவலர்; கர்ண பத்தி - அடையாளம் தெரியாத சிற்பம் |
பிரஸ்தரம்
 |
கோபுரம் - பிரஸ்தரம் உத்தரத்தின் முன் பக்கத்தில் பாரவாஹனர்கள் உள்ளனர். வாஜனம், பத்ம வலபி, கபோதம். கபோத நாசிகளின் சிம்ம வக்ரங்கள் பூதவரியை அமைக்கின்றன. கூரையின் மேல் வேதிகையுடன் கல்ஹாரம் முடிகிறது. |
மேல் நிலைகளும் ஹாரங்களும்
 |
மேல் நிலைகள் மேலேயுள்ள நான்கு நிலைகளும், ஹாரங்களும், கிரீவம், சிகரமும் செங்கல் கட்டுமானம். கீழ் நான்கு நிலைகள் மீதான ஹாரங்கள் நடுவில் இரு பக்க சொருவு சாலைகளுடன் கூடிய சாலை, இரு பஞ்சரங்கள், இரு கர்ணகூடுகள் கொண்டுள்ளன. ஹாராந்தரத்தில் நாசி கோட்டங்கள் உள்ளன. சுதைச் சிற்பங்கள் உள்ளன. உள் பக்கத்தில் ஒவ்வொரு பத்தியிலும் நரசிம்மர் - இரண்ய வதம் கதை மேலிருந்து கீழாக உள்ளது. (நிலை 5 - நரசிம்மர் தூணைப் பிளந்து வெளிவருவது, பக்கத்தில் இரண்யனும் பிரகலாதனும்; நிலை 4 - முழுவதாக வெளிவந்த நரசிம்மர், பக்கத்தில் இரண்யன் போருக்கு ஆயத்தம். நிலை 3 - நரசிம்மர் இரண்யன் போர். நிலை 2 - நரசிம்மர் இரண்யனை வதம் செய்வது. |
வாயில்
நான்கு நிலைக்கால்களிலும் மகரம் மீது நிற்கும் கங்கை. மேலே இலைக்கருக்கு இணை வட்டங்கள். தென்மேற்கில் உள்ள கங்கை சிற்பம் மட்டும் சிதைந்துள்ளது
நிலைக்கால்களின் வெளிப்புறம் மேல் கீழாக சிற்ப வரிசை. அதில் பல்வேறு நிலைகளில் தெய்வங்கள், முனிவர்கள், கணங்கள், மிருகங்கள் ஆகியவற்றின் சிற்பங்கள்.
அதே போன்ற சிற்பங்கள் வாயிலின் இரு புற விளிம்புகளிலும் அமைந்துள்ளன.
நிலைத் தூண்களுக்கு இடையே இரு புறங்களிலும் இருநிலை அறைகள்.
 |
| கோபுர அறைகள் |
கூரையிலும் சிற்ப வேலைப்பாடுகள்.
 |
| கோபுரம் கூரை |
சோமேசுவரர் கோயிலைப் பற்றிய மற்ற பகுதிகள்
துணை
Comments
Post a Comment