வெளிச்சுவர்
உள் திருச்சுற்று மூடிய ஒன்று. அதன் வெளிச்சுவரின் வெளிப்பக்கம் தூண்கள், கோட்டங்கள், கும்ப பஞ்சரங்கள், சிற்பங்களால் அணி செய்யப்பட்டுள்ளது.
 |
| தெற்குச் சுவரின் கிழக்குப் பக்கம் |
 |
| தெற்குச் சுவரின் மேற்குப் பக்கம் |
நவநாதர்கள்
மச்சேந்திரநாதர் முதலான நவநாதர்கள் என்னும் ஒன்பது சித்தர்களின் சிற்பங்கள் வரிசையாக மேற்குச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. இது இந்த கோயிலின் சிறப்புகளுள் ஒன்று.
 |
கோரக்கநாதர் (புலி மீது) - விநாயகரின் வலது புறம் மேலே இந்த கோட்டத்தில் மட்டுமே தெய்வச் சிலை உள்ளது. |
 |
| சௌரங்கிநாதர் (மான்மீது); வராக நாதர் (பன்றி மீது) |
 |
| மச்சேந்திரநாதர் (மீன் மீது), பைரவநாதர் (தேள் மீது), நாகநாதர் (பாம்பு மீது |
 |
| வியாழிநாதர் (வியாழம் மீது, மான் கொம்பு ஊதுகுழலை வலது கையில் பிடித்து); சிங்கம் மீது அமர்ந்த ஒரு நாத சித்தர் |
 |
| கூர்மநாதர் (ஆமை மீது) லலிதாசனத்தில் |
வெளிச்சுவரின் மற்ற சிற்பங்கள்
 |
| இசைக் கலைஞர்கள் |
 |
| விநாயகரைத் தவிர சிற்பம் உள்ள மற்றொரு கோட்டம் |
 |
| மனித உருவங்களுடன் கும்பபஞ்சரம் |
 |
| புருஷாமிருகம் |
உள் திருச்சுற்று
உள் திருச்சுற்றில் உள்ளவை
- மாண்டவ்ய முனிவர் சிலை - இத்தல இறைவன் மாண்டவ்ய முனிவரால் நிர்மாணிக்கப்பட்டது என்று ஒரு தல புராணம் உண்டு.
- நாயன்மார்கள் சிலைகள் - மேற்குப் பகுதியில்
- விநாயகர் - கிழக்கு நோக்கி தென் மேற்குப் பகுதியில்
- முருகர் - கிழக்கு நோக்கி வடமேற்குப் பகுதியில்
இவை சமீப காலத்தில் ஃப் நிறுவப்பட்டவை
 |
| உள் திருச்சுற்று - நாயன்மார்கள் |
கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் உள்ளிட்ட மூலக் கோயில் எளிமையானதாக உள்ளது. அதிஷ்டானம் தெரியவில்லை. திருச்சுற்றின் தரையின் கீழ் புதைந்திருக்கலாம். பித்தியில் தூண்களோ, கோட்டங்களோ, பஞ்சரங்களோ, சிற்பங்களோ இல்லாமல் வெறுமையாக உள்ளது. கருவறையின் மூன்று பக்கங்களிலும் சுவர் வெட்டப்பட்டு தட்சணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கைக்கான கோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சோமேசுவரர் கோயிலைப் பற்றிய மற்ற பகுதிகள்
Comments
Post a Comment